அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ சிறப்பு பூஜை!
ADDED :3689 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் தை மாத சனி பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. எலவனாசூர்÷காட்டை ஸ்ரீகிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தை மாத சனி பிரதோஷத்தையொட்டி நேற்று முன்தினம் மாலை 4.30 மணி முதல் பால், தயிர், சந் தனம், விபூதி, பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். அதே போல் உளுந்தூர்பேட்டை ஸ்ரீகைலாசநாதர் சுவாமி கோவில், ஆதனூர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சுவாமி கோவில், திருநாவலுõர் ஸ்ரீமனோன்மணி உடனுறை பக்த ஜனேஸ்வரர் கோவில், ஏ.குமாரமங்கலம் சிவன் ÷ காவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பிரதோஷத்தில் ஏராளமானோர் விளக்கேற்றி வழிபட்டனர்.