உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொசவபட்டியில் அந்தோணியார் திருவிழா

கொசவபட்டியில் அந்தோணியார் திருவிழா

சாணார்பட்டி:சாணார்பட்டி அருகே கொசவபட்டியில் பூர்வீக புனித உத்திரிய மாதா கோயில் அந்தோணியார் தேர் திருவிழா நடந்தது. பிப்., 6 அன்று காலை மாட்டுப் பொங்கல் வைக்கப்பட்டது. கோயில் முன்பாக பக்தர்கள் மொட்டையடித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். இரவு வாண வேடிக்கை முழங்க ஒயிலாட்டம், கோலாட்டம், கும்மிபாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந் தது. தொடர்ந்து மின் அலங்கார தேர்பவனி நடந்தது. நேற்று பகல் அலங்கார தேர்பவனி நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர் மணியம் டேவிட் இருதயசாமி, நாட்டாண்மை குழந்தைராஜ், மேனேஜர் அருளப்பன், பொருளாளர் சேவியர் ஜோசப்ராஜ் உள்ளிட்ட விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆண்டு தோறும் இந்த திருவிழாவின் போது ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். கோர்ட் தடையால் இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்காதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு அடுத்த ஆண்டாவது நடத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !