உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைத்திக்குப்பம் முத்தாலம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்!

வைத்திக்குப்பம் முத்தாலம்மன் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்!

புதுச்சேரி: வைத்திக்குப்பம் முத்தாலம்மன் கோவிலில் முதலாம் ஆண்டு 108 பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 9.00  மணிக்கு பழைய மாரியம்மன் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து 10.30 மணிக்கு அம்மனுக்கு பால் அபி ஷேகம் நடந்தது. 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், சந்தனக்காப்பு  அலங்காரமும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர்  மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !