பண்ணாரி கோவிலில் தீ சட்டி சுமந்து பக்தர்கள் நேர்த்தி கடன்
ADDED :3682 days ago
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் நேற்று குவிந்தனர். தீ சட்டி சுமந்தும், அங்கபிரதட்சணம் செய்தும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர். பலர் தங்கள் இடத்தில் இருந்து கோவிலுக்கு நடந்தே வந்தனர். பல இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. வெளியூர் பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர். அமாவாசையை ஒட்டி பண்ணாரி அம்மன் மதிய வேளையில் வெள்ளி கவசத்திலும், மாலையில் தங்க கவச அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவில் வளாகத்தில் அம்மனுக்கு சாத்தப்பட்ட பட்டு புடவைகள் ஏலம் விடப்பட்டது. மாலை ஆறு மணி பூஜைக்கு பின், தங்கத்தேர் இழுக்கப்பட்டது.