தை அமாவாசை : அழகர்கோவில் நுாபுரகங்கை தீர்த்தத்தில் புனித நீராடல்!
ADDED :3737 days ago
அழகர்கோவில்: தை அமாவாசையை முன்னிட்டு, அழகர்கோவில் மலை மீது உள்ள நுாபுரகங்கை தீர்த்தத்தில் நீராட ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர்.நீண்ட வரிசையில் நின்று நீராடிய பக்தர்கள் அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசித்தனர். மலையில் உள்ள சோலைமலை முருகனையும் தரிசித்தனர். காலையில் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானைக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனையும், பகலில் சுவாமி புறப்பாடும் நடந்தது.அதுபோல் மலை அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தற்போது மூலவர் பரமஸ்வாமிக்கு தைலக்காப்பு சாத்துப்படி செய்துள்ளதால் உற்சவர் சுந்தரராஜ பெருமாளை மட்டுமே பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி (பொறுப்பு) செல்லதுரை செய்திருந்தனர்.