ஓமலூர் பாகல்பட்டி கிராமத்தில் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :3741 days ago
ஓமலூர்: ஓமலூர் பாகல்பட்டி கிராமத்தில், ராஜகணபதி மற்றும் குஞ்சு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இக்கோவில், புதுப்பிக்கப்பட்டு, வரும், 12ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக நேற்று காலை, 11 மணிக்கு சடை மாரியம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக் குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கோவில் வளாகத்தில் யாக பூஜை நடத்த, பிரம்மாண்டமான யாக குண்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.