உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வெண்னைகாப்பு அலங்காரம்!

பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வெண்னைகாப்பு அலங்காரம்!

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில்  தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வெண்னைகாப்பு மற்றும் மகாலெட்சுமிக்கு லட்டு தேரில் அமர்ந்தப்படி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காரைக்கால் கோவில்பத்து பகுதியில் கோதண்டராமர் கோவிலில் நேற்று முன்தினம் தை அமாவாசையை முன்னிட்டு மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள்,உற்சவர் ஸ்ரீ கோதண்டராமர் மற்றும் ஸ்ரீ த்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது பின்  இரவு ஸ்ரீத்ரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சநேயருக்கு வெண்னை காப்பு அலங்காரம் நடைபெற்றது. இதுப்போல் தை அமாவாசையை முன்னிட்டு கயிலாசநாதர் கோவிலில் மகாலட்சுமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது.பின் மஞ்சள் காப்பில் அன்னபூரணி அலங்காரத்தில் லட்டு தேரில் அமர்ந்திருப்பது போல் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !