சிவலோகநாதர் கோவிலுக்கு புதிதாக குதிரைவாகனம் நன்கொடை!
ADDED :3747 days ago
காரைக்கால்: காரைக்கால் தலத்öரு சிவலோகநாதர் கோவிலுக்கு புதிதாக குதிரைவாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் தலத்தெரு சிவலோகநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சுவாமி வீதியுலா நடைபெறுவது வழக்கம். ஆனால் இக்கோவிலுக்கு செந்தமாக குதிரைவாகனம் இல்லை இதனால் அப்பகுதியில் உள்ள சொர்ணம்மாள் குடும்பத்தினர் சிவலோகநாகசுவாமி கோவிலுக் கு ரூ.1 லட்சம் மதிப்பில் புதிதாக குதிரைவாகனம் மற்றும் ஸ்டீல் டேபிள் ஆகியவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.புதிதாக செய்யப்பட்ட குதிரைவாகனத்திற்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிவலோக நாதசுவாமி கோவில் தலைவர் மணிவாசகம், துணைத்தலைவர் சுப்பிரமணியன்,செயலாளர் மணிவர்மா,பொருளாளர் வெங்கடாசலபதி,உறுப்பினர் அன்புநிலவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.