ஆக.,23ல் ஆவணி மூல உற்சவம் துவக்கம்
ADDED :5168 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் அறிக்கை : இக்கோயிலில் ஆவணி மூல உற்சவம் ஆக.,23 முதல் செப்.,10 வரை நடக்கிறது. இந்நாட்களில் கோயில் சார்பாகவோ, உபயமாகவோ உபய திருக்கல்யாணம், தங்கரத உலா, தங்ககவசம், வைரகீரிடம் சாத்துதல் நடத்தப்படமாட்டாது. செப்.,7 புட்டுத்திருவிழா அன்று, அதிகாலையில் அம்மனும், சுவாமியும் பஞ்சமூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி, புட்டுத்தோப்புக்கு சென்று, புட்டு உற்சவத்தில் பங்கேற்கின்றனர். இரவு கோயிலுக்கு வந்து சேரும் வரை, கோயில் நடைசாத்தப்பட்டு இருக்கும், என தெரிவித்துள்ளார்.