உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அக்னிபிரவேச வைபவம்

திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அக்னிபிரவேச வைபவம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மன் அக்னிபிரவேச வைபவம் நடந்தது.

திருக்கோவிலூர், தெற்கு வீதியில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மன் அக்னிபிரவேச வைபவம் நடந்தது. காலை 7:30 மணிக்கு கலச ஸ்தாபனம், 9:00 மணிக்கு கணபதி ஹோமம், ஆயிஷ்ஹோமம், நவக்கிரக ஹோமம், 108 கோத்ர ஹோமங்கள் நடந்தது.
பகல் 11:00 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், 12:00 மணிக்கு மூலஸ்தானத்தில் உற்சவர், மூலவர்க்கு 21 கூடையில் பூக்கள் சாத்தப்பட்டு அக்னிபிரவேச வைபவம், அருபகாட்சி, சகசரநாமார்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு மூலவர்க்கு புஷ்பம் கலையப்பட்டு, ஆயிரம் லிட்டர் பாலபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆர்யவைசிய சமூகம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !