திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவம்
ADDED :3685 days ago
திருப்பதி: திருமலையில், ரதசப்தமியை முன்னிட்டு, ஒருநாள் பிரம்மோற்சவம் நடக்க
உள்ளது.
திருமலையில், பிப்., 14ல், ரதசப்தமியை முன்னிட்டு, அன்று காலை முதல், இரவு வரை,
ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்பசுவாமி, ஏழு வாகனங்களில், மாடவீதியில்
வலம் வர உள்ளார். இதை காண, ஏராளமான பக்தர்கள் திருமலைக்கு வருவர் என்பதால், தேவஸ்தானம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.ரதசப்தமி அன்று, அனைத்து ஆர்ஜித சேவைகளையும், தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. தர்ம தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அன்று, காலை முதல் இரவு வரை, திருமலை மற்றும் தேவஸ்தானத்தின் அனைத்து கோவில்களிலும், சூரிய பிரபை, சின்னசேஷ வாகனம், கருட
வாகனம், அனுமந்த வாகனம், கல்ப விருட்ச வாகனம், சர்வபூபால வாகனம், சந்திர பிரபை ஆகிய வாகன சேவை நடக்க உள்ளது.