புதுச்சேரி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3686 days ago
புதுச்சேரி: வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் அக்னிப்பிரவேச வைபவம் மற்றும் திருவிளக்கு பூஜை நடந்தது.
விழாவையொட்டி, காலை 9.00 மணிக்கு, வாசவி சமாஜத்திலிருந்து 108 பால்குட புறப்பாடு, 10.00 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிஷேகம், 11.30 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. பின், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.