உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி அம்மன் கோவிலில் 14ல் கும்பாபிேஷகம்

பொள்ளாச்சி அம்மன் கோவிலில் 14ல் கும்பாபிேஷகம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி குஞ்சிபாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழா, வரும் 14ம் தேதி நடக்கிறது. இன்று காலை, 9:00 மணிக்கு, மங்கள இசை, பிள்ளையார் வழிபாடு, விநாயகர் வேள்வி, மாலை, 4:00 மணிக்கு, செண்டை மேளம் முழங்க முளைப்பாரி எடுத்து வருதல், மாலை, 6:00 மணிக்கு, விநாயகர் வழிபாடு, முதற்கால வேள்வி பூஜையும் நடக்கின்றன.

நாளை காலை, 6:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, காலை, 8:00 மணிக்கு, இரண்டாம் கால
வேள்வி, பேரொளி வழிபாடு, மாலை, 5:30க்கு, மூன்றாம் கால வேள்வி, இரவு, 7:30க்கு, எண்வகை மருந்து சாத்துதல் நடக்கின்றன. வரும், 14ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, கோவில் பராமரிப்பு, காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால வேள்வி, வேள்வி நிறைவு, காலை, 8:30 மணிக்கு மேல், 9:30க்குள், திருக்குடங்கள் திருவீதி உலா மற்றும் கும்பாபிேஷகம் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !