மீனாட்சி கோயிலுக்கு 10 நகரும் நிழற்குடை
ADDED :3690 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சிண்டிகேட் வங்கி சார்பில் ரூ.4 லட்சம் மதிப்பில்
பத்து நகரும் நிழற்குடைகள் வழங்கப்பட்டன. இதை கோயில் இணை கமிஷனர் நடராஜனிடம்
வங்கி நிர்வாக இயக்குனர் அருண்ஸ்ரீவத்சவா ஒப்படைத்தார். வங்கி மண்டல மேலாளர்
மணிவண்ணன் உடனிருந்தார்.