உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உழுந்தை எல்லையம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

உழுந்தை எல்லையம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்

உழுந்தை: உழுந்தை எல்லையம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம் மப்பேடு அடுத்துள்ளது, உழுந்தை கிராமம். இங்குள்ள எல்லையம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேகம், இன்று நடைபெற உள்ளது.

முன்னதாக, கடந்த, 10ம் தேதி காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமமும், மாலை, 6:30 மணிக்கு வாஸ்து சாந்தியும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தன. பின், நேற்று காலை, 7:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பூர்ணாஹூதியும், கரிக்கோல் விழாவும் நடந்தன. பின், மாலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால யாகசாலை பூஜையும், இரவு, 7:30 மணிக்கு, கோவில் விமானங்களுக்கு பிரதிஷ்டையும் நடந்தன. தொடர்ந்து, இன்று காலை, 5:30 மணிக்கு, விக்னேஷ்வர பூஜையும், நான்காம் கால யாகசாலை பூஜையும், நாடி சந்தானமும், கடம் புறப்பாடும் நடைபெறும். பின், காலை, 7:30 மணிக்கு மேல், 8:30 மணிக்குள் விமான
கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், அம்பாளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும்.
காலை, 9:30 மணிக்கு மகா தீபாராதனையும், மகா அபிஷேகமும் நடைபெறும். இரவு அம்பாள்
மலர் அலங்காரத்தில் வீதியுலாவும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !