உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொதுத்தேர்வு மாணவர்களுக்காக ஸ்ரீஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை

பொதுத்தேர்வு மாணவர்களுக்காக ஸ்ரீஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை

திருப்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில்,  ஸ்ரீஹயக்கிரீவர் சிறப்பு பூஜை நடக்கிறது.

ஸ்ரீஹயக்கிரீவர், பெருமாளின் அவதாரம்; "ஹயம் என்றால் குதிரை; குதிரை முகம் கொண்ட
பெருமாள். மது, கைபவர் என்ற அரக்கர்கள் நான்கு வேதங்களையும் கடலுக்கு அடியில் மறைத்து விட்டதாகவும், எம்பெருமான், குதிரை முகம் வடிவம் எடுத்து, கடலுக்கு அடியில் சென்று, வேதங்களை மீட்டதாகவும், கல்வி கடவுள் சரஸ்வதிக்கு, இவர் குரு என புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருப்பூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்கிரீவருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த சன்னதியில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், நினைவாற்றல், தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளவும், அதிக மதிப்பெண் பெற்று, சிறப்பான இடம் பெறுவதற்காகவும், கோவில் நிர்வாகம் மற்றும் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, வரும், 21, 28ம் தேதியும்; 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, மார்ச் 6, 13 மற்றும், 17ல் சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜையன்று, காலை, 9:00க்கு, சிறப்பு வேள்வி, 10:00க்கு, திருமஞ்சனம், 11:00க்கு, நாம சங்கீர்த்தனம், 11:30க்கு, சாத்துமறை, மகா தீபாராதனை, 12:00க்கு, பிரசாதம் வழங்கப்படும். பூஜையில் பங்கேற்க கட்டணம் இல்லை; 90474 36666 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்ய வேண்டும், என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !