போடி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3701 days ago
போடி: போடி அருகே காமராஜபுரத்தில் காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காமராஜபுரம் காளியம்மன், மகா வல்லப கணபதி, வள்ளி, தெய்வானை சமேத கார்த்திகேயன், நவக்கிரகம் மற்றும் பரிவார தேவதை கோயில் மகா கும்பாபிஷேகம் கோயில் கமிட்டி தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. செயலாளர் ரவிந்திரன், பொருளாளர் முருகேசன், முன்னாள் தலைவர் அய்யலுசாமி, நிர்வாகஸ்தர்கள் பொன்னையா, ரங்கசாமி, கனகராஜ், ஜெயப்பிரகாஷ் முன்னிலை வகித்தனர். முரளி சீனிவாசன் பட்டாச்சாரியார் குழுவினர் நடத்தி வைத்தனர்.