உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிளேக் மாரியம்மன் குண்டம் திருவிழா

பிளேக் மாரியம்மன் குண்டம் திருவிழா

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, பிப். 22ல்
நடக்கிறது.

கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் குண்டம் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு, கடந்த 8ம் தேதி கொடிக் கம்பம் நடப்பட்டு, 15 நாள் நோன்பு சாட்டப்பட்டது.

தொடர்ந்து, பக்தர்கள் தினமும், கொடிக்கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். வரும் 20ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, மாமாங்கம் ஆற்றியில் சக்தி விந்தையை ஆற்றில் இருந்து அழைத்து வருதலும், 21ம் தேதி காலை, 7:00 மணிக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து, மாவிளக்கு வைத்து வழிபாடு நடக்கின்றன. பின், காலை, 10:00 மணியளவில், 60 அடி நீளமும், மூன்று அடி அகலமும், ஒன்றேகால் அடி ஆழமுள்ள குண்டம் திறப்பு விழாவும், இரவு, 7:00 மணியளவில் குண்டத்திற்கு பூப்போடுதல், அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாமாங்கம் ஆற்றில் இருந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

பிப். 22 காலை 6.00 மணியளவில், மாமாங்கம் ஆற்றில் சக்தி விந்தையை அழைத்து வருதல்,
குண்டம் இறங்கும் பக்தர்கள் உடன் ஊர்வலமாக வந்து, மாரியம்மன் கோவில் முன்பு காலை,
7:00 மணியளவில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கின்றன. பிப். 23ல் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பிப். 24 பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் குண்டம் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !