சிவசுப்ரமண்ய சுவாமி கோவிலில் பிரம்மோற்சவம்
ADDED :3791 days ago
சென்னை: சைதாப்பேட்டை, செங்குந்தகோட்டம், சிவசுப்ரமண்ய சுவாமி கோவிலில்,
பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது.இதையொட்டி, இன்று முதல், 19ம் தேதி வரை,
துவஜாரோகணம், கொடியேற்றம், அஸ்தமானகிரி, தாரகா சூரவாகனம், கந்தர்வஸ்திரி வாகனம்,
மேஷ வாகனம், காமதேனு வாகனம், வெள்ளி மயில் வாகனம், திருத்தேர் உள்ளிட்ட வைபவங்கள் நிகழ உள்ளன. வரும், 20ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, சுவாமி கிழக்கு கோபுர வாசல் வழியாக எழுந்தருளி, அருணகிரிநாதருக்கு அருள் பாலித்த உற்சவம், புஷ்ப விமானம், பஞ்சமூர்த்தி உற்சவம் நடைபெற உள்ளன. 25ம் தேதி இரவு, வள்ளி நாயகி திருக்கல்யாணம் நடக்கிறது.