உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவம் துவக்கம்

தியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரம்மோற்சவம் துவக்கம்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் மாசி உற்சவ திருவிழா நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்வுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து இரவு துவஜா ரோகணம், தியாகராஜ சுவாமி மாட வீதி உற்சவம் நடந்தது.

இரண்டாம் நாளான நேற்று காலை, சூரிய பிரபையில் சந்திரசேகரர் உற்சவம், மாலை, சந்திர பிரபையில் சந்திர சேகரர் உற்சவம், இரவு, மாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், வரும் 19ம் தேதியன்று நடை பெறுகிறது. வரும் 21ம் தேதியன்று, கல்யாண சுந்தரர், வடிவுடையம்மன் திருமணம் மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவமும் நடைபெறுகிறது.

நிறைவு நாளான, 23ம் தேதி தியாகராஜ சுவாமி பந்தம் பறி உற்சவம், 18 திரு நடனத்துடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. பிரமோற்சவ விழா நாட்களில், தினமும் காலை மற்றும் மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !