உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒரே நாளில் ஏழு வாகன சேவை திருமலையில் மிக கோலாகலம்

ஒரே நாளில் ஏழு வாகன சேவை திருமலையில் மிக கோலாகலம்

திருப்பதி: திருமலையில் நேற்று, சூரிய ஜெயந்தி எனப்படும், ரத சப்தமியை முன்னிட்டு, ஒரு நாளில், ஏழு வாகன சேவை  நடைபெற்றது.

காலை முதல், இரவு வரை, ஏழுமலையானின் உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமி, ஏழு வாகனங்களில் வலம் வந்தார். இதை காண, லட்சக்கணக்கான பக்தர்கள், திருமலையில் திரண்டனர். அனைத்து ஆர்ஜித சேவைகள், தரிசனத்திற்கான பரிந்துரை கடிதங்கள் ரத்து செய்யப்பட்டன. கோவையைச்  சேர்ந்த பாலமுருகன் என்பவர் நன்கொடையாக வழங்கிய, ஒரு கோடி  ரூபாய் மதிப்புள்ள, வைர கிரீடம், சின்னசேஷ வாகன சேவையின் போது, மலையப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !