காஞ்சிபுரம் தாயார் குளம்: குப்பையால் சீர்கேடு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம். தாயார் குளத்தில், தேங்கியிருக்கும் குப்பையை அகற்றாததால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.காஞ்சிபுரம். தாயார் குளம், ஐந்து மூலைகளை கொண்ட சிறப்புடையது. கச்சபேஸ்வரர் கோவில் சார்பாக, ஆண்டுக்கு ஒரு முறை, இங்கு தெப்ப உற்சவம் நடைபெறும்.
அமாவாசை மற்றும் பிரத்யேக நாட்களில் இங்கு, முன்னோருக்கு திதி கொடுப்பது வழக்கம். குளத்தின் படிகளில் அமர்ந்து திதி கொடுத்த பின், தேவையில்லாத கழிவுகளை அங்கேயே விட்டுச் செல்கின்றனர். இதனால், குளத்தில், பிளாஸ்டிக் பைகள்; தேங்காய் நார்; துணிகள்; காகித கழிவுகள் தேங்கி நிற்கின்றன. அப்பகுதி வாசிகள் குளத்தில் துணி துவைப்பதால், குளத்து நீர் மேலும் மாசடைகிறது.
இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க குளத்தில் உள்ள கழிவுகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, காஞ்சிபுரம் நகராட்சியின் மருத்துவ அலுவலர் ஜெயச்சந்திரன் கூறுகையில், தாயார் குளத்தில் தேங்கி
இருக்கும் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.