முத்தாலம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்
ADDED :3658 days ago
கண்டாச்சிபுரம்: விழுப்புரம் அடுத்த கெடார் முத்தாலம்மன் கோவிலில், தெப்பல் உற்சவம் நடந்தது. கெடார் முத்தாலம்மன் கோவிலில், தெப்பல் உற்சவம் நடந்தது.முன்னதாக மாலை 7:00 மணிக்கு முத்தாலம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1:00 மணியளவில் முத்தாலம்மன் குளத்தில் தெப்பல் உற்சவம் நடந்தது. இதில் கெடார், புதுப்பாளையம், செல்லங்குப்பம், வீரமூர் பகுதிகளைச் ÷ சர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.