உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் பாலமுருகன் கோவிலில் கிருத்திகை பூஜை விழா

விழுப்புரம் பாலமுருகன் கோவிலில் கிருத்திகை பூஜை விழா

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டிலுள்ள பாலமுருகன் கோவிலில் மாசிமாத கிருத்திகை பூஜைகள் நடந்தது. விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டிலுள்ள, பாலமுருகன் கோவிலில் மாசி மாத கிருத்திகையை யொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதனை தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு பாலமுருகன் வெள்ளிகவசம் சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !