பாலமலை ரங்கநாதர் கோவிலுக்கு புதிய கொடிமரம்!
ADDED :3729 days ago
பெ.நா.பாளையம் ண பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள, பாலமலை ரங்கநாதர் கோவிலுக்கு, புதிய கொடிமரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சிமலையில், பாலமலை ரங்கநாதர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் இருந்த கொடிமரம் பழுதடைந்து விட்டதால், புதிய கொடிமரம் அமைக்கும் பணி துவங்கியது. பாலமலை ரங்கநாதர் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீஷ் கூறுகையில், “வேங்கை மரம், 22 அடி உயரம், ஒரு அடி விட்டத்தில் கொடிமரமாக காரமடையில் செதுக்கப்பட்டுள்ளது. நேற்று கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. விரைவில் நல்லநாள் கணித்து, கொடிமரம் நிர்மாணிக்கப்படும். வரும் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா உற்சவம், புதிய கொடிமரத்தில் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கும்,” என்றார்.