உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோவில் ரோப் கார் இயக்குவதில் சிக்கல்

பழநி மலைக்கோவில் ரோப் கார் இயக்குவதில் சிக்கல்

பழநி :காற்றின் வேகத்தால் பழநி மலைக்கோவில், ரோப்காரை தொடர்ச்சியாக இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பழநி கோவிலில் ரோப்கார் மூலம் மூன்று நிமிடங்களில் மலைக்கு சென்று வர முடியும்; இதில் பக்-தர்கள் ஆர்வத்துடன் பயணிக்கின்றனர். சில நாட்களாக, மலைப்பகுதியில் காற்றின் வேகம், 40 கி.மீ.,க்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் நேற்று முன்தினம், மூன்று மணிநேரம் வரையும், நேற்று காலை, 8:00 மணி முதல் மாலை, 4:00 வரையும் ரோப்கார் இயக்கப்படவில்லை. காற்றின் வேகம் குறைந்த பின் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். ஒரு மணிநேரம் காத்திருந்து, வின்ச் மூலம் மலைக்கோவில் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !