ஆர்.கே.பேட்டை கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3685 days ago
ஆர்.கே.பேட்டை: சீதா லட்சுமணர் உடனுறை கோதண்டராம சுவாமி கோவிலில், பிப்.,19 காலை, கும்பாபிஷேகம் நடந்தது. ஆர்.கே., பேட்டை அடுத்த, சகஸ்ரபத்மாபுரம் கிராமத்தில், சீதா, லட்சுமணர் உடனுறை கோதண்டராம சுவாமி கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை மாலை யாகசாலை பூஜை, துவங்கியது. பிப்.,19 முன்தினம் காலை, மூலவர் ஸ்தாபனம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கலச புறப்பாடும் நடந்தது. 6:00 மணிக்கு, மூவர் மற்றும் கோவில் கோபுரத்திற்கு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.