உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் வெண்ணைத்தாழி உற்சவம்

காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் வெண்ணைத்தாழி உற்சவம்

காரைக்கால்: நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு பிப்.,19ல் வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது.

காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரமோற்சவ நாட்களில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வருகிறது. தினந்தோறும் பெருமாள் கருட வாகனம், அனுமந்த் வாகனம், சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது. சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து  வெண்ணைத்தாழி உற்சவமும் நடந்தது. பிப்.,20ல் தேர் திருவிழா நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !