உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெண்ணெய்நல்லூர் வேணுகோபாலசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

திருவெண்ணெய்நல்லூர் வேணுகோபாலசுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

திருவெண்ணெய்நல்லூர்: மாளிகைமேடு வேணுகோபால் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்
நடந்தது.

திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தில் சத்யபாமா, ருக்மணி சமேத
வேணுகோபாலசுவாமி கோவிலில், பிப்.,19ல் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 15ம் தேதி பகவத் அனுக்ஞையுடன் யாகபூஜைகள் துவங்கின. 16ம் தேதி மகாசாந்தி ஹோமம், ததுக்த ஹோமங்கள் மற்றும் பூர்ணாஹூதி நடந்தது. பிப்.,19 காலை 10:00 மணிக்கு, கடங்கள் புறப்பாடாகி, உப்பிலியப்பன் கோவில் கோபாலதேசிகாச்சார்ய சுவாமிகள் தலைமையில், கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், வீதியுலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !