உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் 28ல் மாசிமக தேரோட்டம்

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் 28ல் மாசிமக தேரோட்டம்

அரூர்: அரூர் அடுத்த, தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேரோட்டம் வரும், 28ம் தேதி
நடக்கிறது. அரூர் அடுத்த தீர்த்தமலையில் அமைந்துள்ளது தீர்த்தகிரீஸ்வரர் கோவில். ராமபிரான், ராவணனை சம்ஹாரம் செய்து திரும்புகையில், முதல்கால பூஜையை ராமேஸ்வரத்தில் முடித்து விட்டு, இரண்டாம் கால பூஜைக்காக தீர்த்திகிரி மலைமீது அம்பு எய்தி தீர்த்தம் உண்டாக்கி, அந்த தீர்த்தத்தைக் கொண்டு பூஜைகளை முடித்தார் என்பது ஐதீகம். அந்த தீர்த்தமே ராமர் தீர்த்தம் என்ற புண்ணிய தீர்த்தமாகும். ராமர், பார்வதிதேவி, குமரகடவுள், அக்னிதேவன், அகத்திய முனிவர் ஆகியோர் தவம் செய்து பாவ விமோச்சனம் பெற்றத்தலம். தர்மபுரி மாவட்டத்தில் அருணகிரி நாத சுவாமிகளால் திருப்புகழ் அருளிய ஒரே திருத்தலம் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருத்தலம். மாசிமக திருத்தேர்விழா வரும், 21ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்குகிறது. 22ம் தேதி கொடியேற்றமும், 23ம் தேதி சுவாமி திருவீதி உலாவும், 26ம்தேதி சுவாமி கல்யாண உற்சவமும் நடக்கிறது. முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், 28ம்தேதி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !