உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுாரில் ராதா கல்யாண உற்சவம்

கடலுாரில் ராதா கல்யாண உற்சவம்

கடலுார்: கடலுாரில் 30ம் ஆண்டு ராதா கல்யாண உற்சவம் நடந்தது. கடலுார், புதுப்பாளையம் குமரன் மகாலில் பக்த பஜனை மண்டலி சார்பில் 30ம் ஆண்டு ராதா கல்யாண உற்சவத்தையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி பூஜை, அஷ்டபதி பஜனை, மாலை ஜானவாசம், நிச்சயதார்த்தம், திவ்யநாம பஜனை நடந்தது. நேற்று காலை உஞ்சவிருத்தி, ராதா கல்யாண உற்சவம், ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !