உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவன் கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு

ஆத்தூர்: ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், சனி
பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆத்தூர் கோட்டை பகுதியில் உள்ள
காயநிர்மலேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம், சனிபிரதோஷத்தையொட்டி, மூலவர்
காயநிர்மலேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன், நந்தி ஆகிய சுவாமிகளுக்கு, பால், சந்தனம், மஞ்சள், தேன், வெண்ணெய் போன்ற அபி?ஷக பூஜைகள் நடந்தது. பின், காயநிர்மலேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மற்றும் நந்தி ஸ்வாமிகள், வெள்ளி கவசம், புஷ்ப சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதே போல், ஆத்தூர் கைலாசநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், சனிபிரதோஷ பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !