உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நைனாமலை கோவில் மாசிமக தேர்த்திருவிழா

நைனாமலை கோவில் மாசிமக தேர்த்திருவிழா

சேந்தமங்கலம்: நாமக்கல் அடுத்த சேந்தமங்கலத்தில் உள்ள, நைனாமலை வரதராஜ பெருமாள், லட்சுமி நாராயண பெருமாள், சோமேஸ்வரர் கோவில்களில், மாசிமக திருத்தேர் பெருவிழா, கொடியேற்றத்துடன் கடந்த, 14ம் தேதி துவங்கியது. அதை தொடர்ந்து, கிராம சாந்தி அழைத்து, அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தது. நேற்று காலை, சோமேஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடந்தது. இரவு குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பட்டார். இன்று, காலை சோமேஸ்வரர் பரிவாரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, நைனாமலை வரதராஜ பெருமாளுக்கு பெரிய தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை, பெரிய தேர் நிலை சேர்தல் மற்றும், 25ம் தேதி, இரவு வசந்த உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !