உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டி.என்.பாளையம் ஆதி கருவண்ணராயர் கோவில் பொங்கல் விழா

டி.என்.பாளையம் ஆதி கருவண்ணராயர் கோவில் பொங்கல் விழா

டி.என்.பாளையம்: பவானிசாகர் அருகே, வனப்பகுதியில் ஆதி கருவண்ணராயர் கோவில் உள்ளது. இங்கு, 55வது மாசி மக பொங்கல் விழா நேற்று துவங்கியது. நாளை வரை விழா நடக்கிறது. இது உப்பிலிய நாயக்கர் சமூகத்தினரின் குல தெய்வ கோவிலாகும். டி.என்.பாளையம், வாணிப்புத்தூர், ஏளூர், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளில், இந்த சமூகத்தினர் அதிகளவில் உள்ளனர். விழாவை ஒட்டி, 50க்கும் மேற்பட்ட வேன்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று சென்றனர். பொங்கல் வைத்து, ஆடு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !