உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓசூர் நாகாளம்மா புற்று கோவில் பிரதிஷ்டை

ஓசூர் நாகாளம்மா புற்று கோவில் பிரதிஷ்டை

ஓசூர்: ஓசூர் அடுத்த, சூளகிரி மலை அடிவாரத்தில், நாகாளம்மா புற்று கோவில் பிரதிஷ்டை
செய்யப்பட்டது. ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளியில் உள்ள அருள் ஜோதியம்மா கோவிலில், சுவாமி அருள் வந்து ஆடிய செஞ்சீவம்மா என்பவர், சூளகிரி மலை அடிவாரத்தில், நாகாளம்மா புற்று வடிவத்தில் அருள் பாலிப்பதாகவும், அதில் கோவில் கட்டி வணங்க வேண்டும் எனவும்
தெரிவித்தார். இதை அறிந்த சூளகிரி பகுதி பொதுமக்கள், பூசாரி ரமேஷ் தலைமையில், சூளகிரி மலை அடிவாரத்தில், நாகாளம்மா புற்று கோவிலை நேற்று காலை பிரதிஷ்டை செய்தனர்.
அதைத்தொடர்ந்து ஆடு பலி கொடுக்கப்பட்டு, பக்தர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !