கரூர் சனி பிரதோஷ விழா: பக்தர்கள் பங்கேற்பு
ADDED :3681 days ago
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், வெண்ணைமலை பாலதண்டாயுதபாணி சுவாமி
கோவில், குளித்தலை கடம்பர் கோவில், அய்யர்மலை சிவன் கோவில், ரங்கமலை மல்லீஸ்வரர் கோவில், புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் கோவில், மிகவும் பழமைவாய்ந்த புகழூர் மேகப்பலீஸ்வரர் கோவில், வேலாயுதம்பாளையம் அருகிலுள்ள மாதேஸ்வரன், மாதங்கி திருத்தலம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று முன்தினம் சனி பிரதோஷம் கோலாகலமாக நடந்தது.
ஆங்காங்கே மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் உள்ள நந்திக்க பால், தயிர், தேன்,
மஞ்சள், திரவியப்பொடி போன்ற மங்களப் பொருட்கள் கொண்டு பல்வேறு அபிஷேகங்கள்
செய்யப்பட்டது. இதில், ஆங்காங்கே உள்ள சிவன் கோவில்களில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.