குளித்தலை கடம்பர்கோவிலில் மாசிமகம் தேர்த்திருவிழா
ADDED :3680 days ago
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பர்கோவில் கடம்பவனேஸ்வர் மாசிமகத்தேர் திருவிழா தேரோட்டம் நேற்று காலை, 10.10 மணியளவில் நடந்தது. திருவிழாவில் கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்திலிருந்து பொது மக்கள் மக்கள் சிவனடியார்கள் மேளதாளத்துடன் பாட்டுபாடிக்கொண்டு வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கடம்பர்கோவில் செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர். இன்று காலை, 9.30 மணியளவில் குளித்தலை கடம்பர் கோவில் காவேரியாற்று படித்துறையில், திருச்சி மாவட்டம் திருஈங்கோய்மலை கோவில் சுவாமி, குளித்தலை கடம்பவனேஸ்வர் சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்கும்.