உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி ஜெடையலிங்க சுவாமி கோவிலில் பூகுண்டம்

கோத்தகிரி ஜெடையலிங்க சுவாமி கோவிலில் பூகுண்டம்

கோத்தகிரி: கோத்தகிரி கெங்கரை சக்கமரஹாடா ஜெடையலிங்க சுவாமி கோவிலில், பூகுண்டம் திருவிழா பிப்.,22 கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கெங்கரை சக்கமரஹாடா பகுதயில், பிப்.,22 ல் நடந்த ஜெடையலிங்க சுவாமி, பூகுண்ட விழாவை முன்னிட்டு, காலை, 9:00 மணிக்கு, ஐயனுக்கு அபிஷேக பூஜையும், காலை, 10:00 மணிக்கு, அலங்கார பூஜையும் நடந்தது. பகல், 2:00 மணிக்கு, பூகுண்ட நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளானோர் பயபக்தியுடன் பூகுண்டம் இறங்கினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். பலர் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். வரும், 29ம் தேதி, காலை, 9:00 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர்கள், கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !