உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தெப்போற்சவம் கோலாகலம்

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தெப்போற்சவம் கோலாகலம்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி மாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பிப்.,22 தெப்போற்சவம் நடைபெற்றது.

திருப்போரூர் கந்தசுவாமி பெருமான் கோவிலில் கடந்த, 13ம் தேதி மாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றில் இருந்து தினமும் ஒரு உற்சவம் நடைபெற்று வருகிறது. அதுபோல் பிரம்மோற்சவத்தின் 10ம் நாளான பிப்.,22 தெப்போற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன்பாக நண்பகல் 12:00 மணியளவில் தீர்த்தவாரியும், அதனைத்தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும் சுவாமிக்கு செய்யப்பட்டது. பின்னர் 7:00 மணி அளவில், சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் கந்தசாமி பெருமான் சரவணப்பொய்கையில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினார். குளத்தின் நான்கு கரைகளிலும் திரண்டிருந்த பக்தர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில் சரவணப்பொய்கையில், ஐந்து சுற்றுக்கள் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் வாணவேடிக்கையுடன் திருவீதியுலா சிறப்பாக நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !