ஆலமரத்தெரு கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3667 days ago
ஈரோடு: ஈரோடு மரப்பாலம் ஆலமரத் தெரு விநாயகர், கன்னிமார், பட்டதரசியம்மன், மதுரைவீரர், பொம்மி, வெள்ளையம்மாள் கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 26ம் தேதி நடக்கிறது. முன்னதாக, நாளை (24ம் தேதி) காலை காவிரியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. இதை தொடர்ந்து, 25ம் தேதி, கணபதி ஹோமம், தனபூஜை, தீபாராதனை நடக்கிறது. அன்று காலை, 11மணிக்கு மேல் எல்லை மாரியம்மன் கோவிலில் இருந்து முளைப்பாரி எடுத்து வருதல், மாலை கோபுர கலசங்கள் வைத்தல், வாஸ்து சாந்தி, முதற்கால யாக பூஜை நடக்கிறது. 26ம் தேதி காலை, 9.30 மணிக்கு பரிவார தெய்வங்களுடன் கூடிய மூலவர் கலசத்துக்கு, மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து மஞ்சள் நீராட்டும், காலிங்கராயன் வாய்க்காலில் முளைப்பாரி விடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.