பு.கொணலவாடியில்ஆடி தேரோட்டம்
ADDED :5161 days ago
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை அடுத்த பு.கொணலவாடி ஐயனார் குடும்பியம்மன் கோவில் ஆடி தேரோட்டம் நடந்தது.ஆடிமாத திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன் பு.கொணலவாடி ஐயனார் குடும்பியம்மன் கோவிலில் துவங்கியது. நேற்று முன்தினம் தேர் திருவிழாவையொட்டி ஆடு பலியிட்டு தேரோட்டத்தை துவக்கினர். இதில் திரளான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.