அவலூர்பேட்டையில் ஆன்மிக ஜோதி விழா
ADDED :3650 days ago
அவலூர்பேட்டை:அவலூர்பேட்டையில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டையில் மேல்மருவத்தூர் அடிகளாரின் பவள விழாவை முன்னிட்டு ஆன்மிக ஜோதி வருகை நிகழ்ச்சி நடந்தது. உலக நன்மை மற்றும் இயற்கை வளம் வேண்டி நூற்றுக்கும் மேற்பட்ட இல்லங்களில் ஆன்மிக ஜோதி எடுத்து செல்லப்பட்டது. இதில் மன்ற பொறுப்பாளர் முத்துகிருஷ்ணன், சரவணன், வெண்ணிலா, வசந்தி, ராணி, மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.