ஜகந்நாத அஷ்டகத்தின் ஆசிரியர் யார்?
ADDED :3912 days ago
ஜகந்நாதாஷ்டகத்தை வெளியிட்டிருக்கும் சைதன்ய சம்பிரதாயத்தினர், அதை கிருஷ்ணசைதன்யர் இயற்றியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். தென்னிந்தியாவில் வெளியாகியுள்ள ஆதிசங்கரர் ஸ்தோத்திர நூல்களில், அதே ஜகந்நாதாஷ்டகத்தை ஆதிசங்கரர் இயற்றியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது விஷயமாக நான், ஜகந்நாதர் கோயில் இருக்கும் புரிக்குத் தங்கள் கேள்வி வந்ததைத் தொடர்ந்து கடிதம் எழுதிக் கேட்டேன். அதற்கு அங்கிருந்து, “புரி ஜகந்நாதத்திலேயே வாழ்ந்த கிருஷ்ணசைதன்யர்தான், ஜகந்நாதாஷ்டகத்தையும் இயற்றியிருக்க வேண்டும் என்று, இங்குள்ள உள்ளூர்வாசிகள் நினைக்கிறார்கள் என்று பதில் வந்தது.