பக்தி , பூரண பக்தி என்றால் என்ன?
ADDED :3912 days ago
தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள அன்பு வாஞ்சை எனப்படுகிறது. கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள அன்பு காதல் எனப்படுகிறது. நண்பர்களுக்கிடையே உள்ள அன்பு நட்பு எனப்படுகிறது. இதுபோல் ஆண்டவனிடம் நாம் கொள்ளும் அன்பு பக்தி எனப்படும். ஞானம் இல்லாத பக்தி பல மூடப் பழக்கங்கள் உள்ளதாக, அறிவுக்குப் பொருந்தாததை எல்லாம் ஏற்றுக்கொள்வதாக, மூட நம்பிக்கைகள் கொண்டதாக தவறானவற்றை ஏற்றுக்கொள்வதாக ஆகிவிடக்கூடும். கர்மம் இல்லாத பக்தியில் சோம்பல் நுழையவும் இடம் இருக்கிறது. வெறும் பக்தி இருந்தால் போதாது; பக்தியுடன் ஞானமும் கர்மமும் இணையும் போதுதான் பக்திப் பயிர் நன்கு செழித்து வளரும். பக்தியுடன் ஞானமும் கர்மமும் இணைவதே பூரண பக்தி ஆகும். இதற்கு ஆஞ்சநேயர் மிகச் சிறந்த உதாரணமாவார்.