உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்மஞானம் என்றால் என்ன?

ஆத்மஞானம் என்றால் என்ன?

நாம் நம்மைப்பற்றி நினைக்கும்போது நமது உடலைத்தான் நினைக்கிறோம். பிறரைப் பற்றி நினைக்கும்போதும் பிறரது உடலைத்தான் நினைக்கிறோம்.  உதாரணமாக, உங்கள் நண்பர் காசிநாதன் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்  என்று, ஒருவர் என்னிடம் வந்து சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். உடனே எனக்குக் காசிநாதன் உருவம், அதாவது அவரது உடல் நினைவுக்கு வருகிறது. இதைப் போலத்தான் எல்லோர் விஷயத்திலும் எல்லோரும் செய்கிறோம். ஆனால் மனிதனின் நிஜசொரூபம் ஆத்மா என்று வேதாந்தம் கூறுகிறது. மனிதன் உடல் அல்ல , மனிதன் தனது உண்மையான நிலையை உண்மையாகவே அறிந்துகொள்வதுதான் ஆத்மஞானம் என்று சொல்லப்படுகிறது. உடலுக்கு உயிர் இன்றியமையாதது போல், உயிரின் நலனுக்கு ஆத்மஞானம் இன்றியமையாதது. கோபம், மகிழ்ச்சி, பாசம், அன்பு, துன்பம் ஆகியவற்றை நாம் நம் அனுபவத்திலேயே உணர்கிறோம். இதைப் போலவே மனிதன், தான் வாழும்போதே, தன் வாழ்நாளிலேயே ஆத்மஞானம் என்பதையும் உணரமுடியும். அவ்விதம் ஆத்மஞானத்தை ஒருவர் உணர்ந்த நிலையை ஜீவன்முக்தநிலை  என்று சொல்கிறோம். மனிதன் தன்னில் தானான நிலை, மனிதன் தனக்குள்ளேயே ஐக்கியப்பட்ட நிலை, மனிதன் தன்னை முழுமையாக உணர்ந்த நிலை. இதுவே ஆத்மஞானம் பெற்ற ஒரு பக்கியசாலியின் நிலையாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !