பிறப்பையும் இறப்பையும் கடப்பதற்கு என்ன வழி?
நோயிலிருந்து விடுபடுவதற்கு மருத்துவரின் உதவியை நாடுகிறோம். வறுமையில் இருப்பவன் வறுமையிலிருந்து விடுபடும் பொருட்டு செல்வந்தரின் உதவியை நாடுகிறான். குளிர் நீங்க உஷ்ணமும், இருள் நீங்க ஒளியும் தேவைப்படுகின்றன. அதுபோல் பிறப்பையும் இறப்பையும் கடப்பதற்கு, பிறப்பும் இறப்பும் இல்லாதவனாகிய இறைவனை நாட வேண்டும். இறைவனை நாம் எப்படிப் பற்ற வேண்டுமோ, அந்த விதத்தில் சிக்கெனப் பற்றிக்கொண்டால், நம் வாழ்க்கையிலுள்ள குறைகளும் கறைகளும் நீங்கும், பிறப்பையும் இறப்பையும் நாம் கடக்க முடியும். மகான் துளசிதாசர் தாம் இயற்றிய விநயபத்திரிகா என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். ஏ பைத்தியமே! ராம், ராம் என்று சதா ஜபம் செய்து கொண்டிருப்பாயாக. கடப்பதற்கு அரிதான இந்தப் பிறவி என்ற பெருங்கடலைக் கடப்பதற்கு ராம நாமமே தோணியாகும். ராம நாமம் என்ற சாதனையினால்தான் நீசகல சவுபாக்கியங்களையும் அடைய முடியும். துளசிதாசா! நீயோகம், யக்ஞம், விரதம், புலனடக்கம் போன்றவை எதுவும் இல்லாமலேயே இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடக்க விரும்பினால், மறவாமல் இரவும் பகலும் பகவானின் திருவடி நிழலை நினைப்பாயாக.