மாரியம்மன் கோவில் தேர்திருவிழா பக்தர்கள் உற்சாகம்
பந்தலுார்: பந்தலுார் அருகே அத்திக்குன்னா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பந்தலுார் அருகே அத்திக்குன்னா பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த, 16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 21ம் தேதி காலை, மஹா அபிஷேகம், 8:00மணிக்கு அலகு குத்துதல், பறவைக்காவடி, பால்குட ஊர்வலம், கஞ்சி வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இரவ தேர் ஊர்வலமும், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தேர் ஊர்வலத்தை எம்.எல்.ஏ., திராவிடமணி, தேவாலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். 22ம் தேதி காலை மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவுபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா நாகையா, தலைவர் காங்கமுத்து, செயலாளர் பிச்சை, பொருளாளர் அங்கமுத்து ஆகியோர் முன்னிலையில், கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.