ராமேஸ்வரத்தில் சிவராத்திரி விழா: கொடியேற்றத்துடன் பிப்.,28ல் துவக்கம்
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மகா சிவ ராத்திரி விழா நாளை(பிப்., 28) காலை 8 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதைமுன்னிட்டு தினமும் காலை, மாலை, இரவு வேளைகளில் சுவாமி அம்பாள் தங்க காமதேனு, சிம்மம், ரிஷபம், கேடயம், குதிரை, வெள்ளி அன்னம், கிளி, யானை வாகனங்களில் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி வீதியுலா வருகிறார்.
மார்ச் 5ல் முத்தங்கி சேவை, மார்ச் 7 மகா சிவ ராத்திரி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்கு தேரோட்டம், இரவு 9 மணிக்கு வெள்ளி ரத உலா நடக்கின்றன. மார்ச் 8 மதியம் 12 மணிக்கு அக்னி தீர்த்தக்கடலில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு கொடியிறக்கப்படுகிறது. மார்ச் 9, 10 இரவு 7 மணிக்கு பிச்சாடனர், சண்டிகேஸ்வரர் கோலத்தில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது. பிப்.,28 முதல் மார்ச் 10 வரை தினமும் இரவு பல்வேறு ஆன்மிக கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.