பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
பொள்ளாச்சி: மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழாவில் பிப்.,28 கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றி, பூவோடு ஏந்தி அம்மனை வழிபாடு செய்து வருகின்றனர்.
பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த 9ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவ ங்கியது. இதனைத்தொடர்ந்து, கடந்த 16ம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தினசரி கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபாடு செய்தனர். காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்கள் பூவோடு எடுத்து, வேண்டுதலை நிறைவேற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். பிப்.,26 இரவு, 11:00 மணிக்கு கிராமசாந்தி நிகழ்ச்சி நடந்தது. பிப்.,27 காலை, 10:30 மணிக்கு கொடியேற்றமும், பூவோடு மற்றும் அலகு குத்தும் திருவிழா மாலை, 6:00 மணிக்கு இடம்பெறுகின்றன. மார்ச் 2ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு, 7:00 மணிக்கு தேரோட்டம் முதல்நாள் வெள்ளித்தேரில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 5ம் தேதி காலை, 8:30 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், இரவு, 9:00 மணிக்கு கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும்; 7ம் தேதி இரவு, 8:00 மணிக்கு மகா அபிேஷகமும் நடைபெறுகிறது.