கீழ்பெரும்பாக்கத்தில் மயான கொள்ளை விழா
ADDED :3526 days ago
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், அங்களாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயான கொள்ளை விழா நடந்தது. விழாவையொட்டி, கடந்த 26ம் தேதி காலை 7:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 8:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன் தினம் காலை 11:00 மணிக்கு அங்காளம்மன், பாவாடைராயன், குறவன், குறத்தி, காளி, காட்டேரி வேடமணிந்து பக்தர்களின் வீதியுலா நடந்தது. பின், மதியம் 1:00 மணிக்கு, கீழ்பெரும்பாக்கம் மயானத்தில் மயான கொள்ளை நடந்தது. இதில், ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.